சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று இன்று காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது. அவரது மறைவுச் செய்தி திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மோகினி மணி அவர்களின் மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது.
அவரை பிரிந்து வாடும் நடிகர் அஜித் குமார், அவரது வாழ்க்கை இணையர் நடிகர் ஷாலினி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.