தமிழக செய்திகள்

நடிகர் அஜித்தின் தாயார் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

சகோதரர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரா அஜித்தின் தாயார் மோகினி(84) இன்று காலை சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் பதிவு

அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மநீம தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

மறைந்த செய்தி

சகோதரர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

ஆறுதல்

அன்பு தாயை இழந்து தவிக்கும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.