தமிழக செய்திகள்

நடிகர் அஜித்தின் தாய் மறைவு: எல்.முருகன் இரங்கல்

இந்திய கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என்று எல்.முருகன் கூறினார்.

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இந்திய கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தாயாரை இழந்து வாடும் திரு. அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு, அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.