தமிழக செய்திகள்

நடிகர் அஜித்தின் தாய் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தாயார் மோகினி (84). இவர் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் திருமதி மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT