சென்னை,
எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலின் தழுவல் தான் இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் அசுரன். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், மக்கள் மத்தியிலும் நல்ல பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் அசுரன் படம் மட்டுமல்ல பாடம் என இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ்க்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்க்கும் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.