தமிழக செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் விபத்து

விபத்து நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஓட்டிய கார் சென்னையில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அதிவேகமாக சென்றதாக கூறப்படும் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதாக கூறப்படுகிறது. விபத்தில் கார் கடுமையாக சேதமடைந்தது.

விபத்து நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT