சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
கடந்த சில நாள்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த ரஞ்சனா, அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த ரஞ்சனா, திமுகவில் இணைந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது என திமுகவில் இணைந்த பின் நடிகை ரஞ்சனா நாச்சியார் கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்த ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைந்த நிலையில் அங்கிருந்து விலகி தற்போது திமுகவில் ஐக்கியம் ஆகி உள்ளார்.