தமிழக செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய நடிகை சவுகார் ஜானகியின் மகள்: காரணம் என்ன.?

கதவை உடைத்து சவுகார் ஜானகியின் மகளை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.

சென்னை,

சென்னை துரைப்பாக்கத்தில் பூட்டிய வீட்டுக்குள் நடிகை சவுகார் ஜானகியின் 76 வயது மகளை தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து மீட்டனர்.

சவுகார் ஜானகியின் மகள்

சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மகள் யாக்னபிரபா (76) வசித்து வருகிறார். இவரது பிள்ளைகள் அமெரிக்காவில் உள்ள நிலையில் சென்னை துரைப் பாக்கம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். மூதாட்டி யாக்னபிரபாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

கீழே விழுந்தார்

காலில்அறுவைசிகிச்சை மேற்கொண்ட நிலையில் நடக்க முடியாத சூழலில் வீட்டினுள் வீல் சேரை பயன்படுத்தி வந்துள்ளார்.

இன்று காலை வீட்டினுள் கழிவறைக்கு செல்லும்போது வீல்சேரில் இருந்து தவறி கீழேவிழுந்துள்ளார். கீழே விழுந்த யாக்னபிரபாவால் மீண்டும் வீல் சேரில் அமர முடியவில்லை. பூட்டப்பட்ட வீட்டின் கதவையும் அவரால் திறக்க முடியவில்லை. இப்படி இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்ட அவர், தனது அருகில் இருந்த செல்போன் மூலம் அருகில் வசிக்கும் உறவினரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்

பின்னர் அவரது உறவினர் 112 என்ற தீயணைப்பு கட் டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு உதவி நாடியதும், துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சிக்கிக் கொண்டிருந்த மூதாட்டி யாக்னபிர பாவை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உடனே அவரது குடும்ப மருத்துவரை சம்பவ இடத்துக்கு வரவைத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

நடக்க முடியாத மூதாட்டி வீட்டினுள் பூட்டப்பட்டுள்ள கதவின் தாழ்ப்பாளை திறக்க முடியாமல் வீட்டினுள் சிக்கிக்கொண்ட நிலையில் துரிதமாக செயல்பட்டு மூதாட்டியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT