தமிழக செய்திகள்

ராமேசுவரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ராமேசுவரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16621/16622) இயக்கப்பட்டு வருகிறது.

ராமேசுவரம்,

தென்னக ரெயில்வே சார்பில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்களும், ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு இயக்கப்படும் வாராந்திர ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ராமேசுவரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16621/16622) நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற செப்டம்பர் மாதம் 27-ந் தேதி வரை 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. இதையடுத்து, இந்த ரெயிலில், 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 8 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.