தமிழக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்காக நாளை முதல் கூடுதல் பஸ்கள்: போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு

முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 41 சிறப்பு பஸ்கள் வாயிலாக 84 பயண நடைகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

சென்னையில் பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசல் இன்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்து சென்றுவர ஏதுவாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 25 பள்ளிகளுக்கு 25 பஸ்கள் மூலம் 50 பயண நடைகள் இயக்கப்பட்டு வந்தது.

சிறப்பு பஸ்

இந்தநிலையில் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 41 சிறப்பு பஸ்கள் வாயிலாக 84 பயண நடைகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்களை போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.