சென்னை,
தெற்கு ரெயில்வேயில் அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. இதில் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.22667), நாளை (1-ந்தேதி முதல்) வருகிற செப்டம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22668), இன்று (31-ந்தேதி) முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16780), நாளை மறுநாள் (2-ந்தேதி) முதல் செப்டம்பர் 29-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருப்பதி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16779), ஆகஸ்டு 3-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.