தமிழக செய்திகள்

திருச்சி - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

திருச்சி - ஸ்ரீகங்காநகர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி ஜோத்பூர் இடையே ஹம்சபர் எக்ஸ்பிரஸ் (எண்:20481/20482) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகள் வசதிக்காக ஜோத்பூரில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையும், திருச்சியில் இருந்து வருகிற 4-ந்தேதி முதல் வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரையும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று கூடுதலாக இணைத்து இயக்கப்படுகிறது.

அதுபோல் திருச்சி - ஸ்ரீகங்காநகர் இடையே ஹம்சபர் எக்ஸ் பிரஸ் ரெயில் (எண்: 22497/22498) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகள் வசதிக்காக ஸ்ரீகங்காநகரில் இருந்து வருகிற 6-ந்தேதி முதல் வருகிற 27-ந்தேதி வரையும், திருச்சியில் இருந்து வருகிற 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ஒன்று கூடுதலாக இணைத்து இயக்கப்படுகிறது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.