நெல்லை,
நெல்லை வழியாக நாகர்கோவில் -கோயம்புத்தூர் இரவுநேர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22667 / 22668) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.
இதையடுத்து இந்த ரெயிலில் 1 முதலாம் வகுப்புடன் இணைந்த இரண்ட டுக்கு ஏ.சி. பெட்டி, 1 ஏ.சி. இரண்டுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி கள், 14 தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 4 பொது பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 சரக்கு பெட்டி என மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்து உள்ளார்.