தமிழக செய்திகள்

சதாப்தி, உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு 3 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு 3 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுகின்றன. அதன்படி, எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் - கோவை இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜூன் 21-ந் தேதி அன்று கூடுதலாக இருக்கை வசதி பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.

கூடுதல் பெட்டி இணைப்பு:

அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்டிரலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (19-ந் தேதி) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், அதாவது மங்களூரு சென்டிரலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் ரெயிலில் இந்த நடைமுறை 21-ந் தேதி செயல்பாட்டில் இருக்கும்.

உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்:

மேலும், சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு வரும் 19 (நாளை), 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும். இதேபோல், தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 20 மற்றும் 21-ந் தேதிகளில் இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.