தமிழக செய்திகள்

தூத்துக்குடி, ஈரோடு, சார்லப்பள்ளி, திருப்பதி ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஏற்காடு எக்ஸ்பிரஸ்

ஈரோடு - சென்னை சென்டிரல் இடையே இயக்கப்படும் ஏற்காடு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில், தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து இன்று முதல் 9-ந் தேதி வரையும், சென்னை சென்டிரலில் இருந்து வரும் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையும் இந்த படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கும்.

சார்லப்பள்ளி எக்ஸ்பிரஸ்

இதேபோல், சென்னை சென்டிரல் - சார்லப்பள்ளி இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில், தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து நாளை முதல் 10-ந் தேதி வரையும், சார்லப்பள்ளியில் இருந்து 4-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை இந்த படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கும்.

முத்துநகர் எக்ஸ்பிரஸ்

மேலும், தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில், தற்காலிகமாக 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் இருந்து இன்று முதல் ஜூலை 31-ந் தேதி வரையும், சென்னை எழும்பூரில் இருந்து நாளை முதல் ஆகஸ்டு 1-ந் தேதி வரையும் இந்த 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கும்.

சப்தகிரி எக்ஸ்பிரஸ்

இதேபோல், சென்னை சென்டிரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில், தற்காலிகமாக ஒரு ஏ.சி. இருக்கை வசதி (சேர் கார்) பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

நாளை முதல் ஜூலை 31-ந் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.