திருச்சி,
ரெயில்களில் பயணிகளின் நெரிசலை குறைப்பதற்காக பின்வரும் ரெயில்களில் தற்காலிக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஸ்ரீகங்காநகர்-திருச்சி இடையே திங்கட்கிழமை இயக்கப்படும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற டிசம்பர் 7 முதல் 28-ந்தேதி வரை கூடுதல் தற்காலிக ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி இணைக்கப்படும்.
மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை 4.45-க்கு புறப்படும் திருச்சி- ஸ்ரீ கங்காநகர் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22498) ரெயிலில் டிசம்பர் 11 முதல் ஜனவரி 1-ந் தேதி வரை கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி இணைக்கப்படும்.