சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து தினமும் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 3.10 மணிக்கு வரும். அதன்பிறகு 3.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றடையும். அதேபோல் பெங்களூரூ- சேலம்-கொச்சிக்கும், அதே வழித்தடத்தில் மறுமார்க்கத்திலும் விமானம் இயக்கப்பட்டு வந்தது. மேலும், இண்டிகோ நிறுவனம் சார்பில் பெங்களூரூ-சேலம்-ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும் மத்திய அரசின் உதான் திட்டத்தில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் நேற்றுடன் சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் சேலத்தில் இருந்து தினமும் சென்னைக்கு ஒரு சேவை மட்டும் இருந்து வந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கூடுதலாக மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன்படி தினமும் சென்னையில் இருந்து 11.10 மணிக்கு விமானம் புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சேலம் விமான நிலையத் திற்கு வந்தடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு சென் னைக்கு புறப்பட்டு செல்கிறது. இதேபோல் சென்னையில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு மாலை 4.50 மணிக்கு வந்தடைகிறது. மறுமார்க் கத்தில் சேலத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.