தமிழக செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்

மகா சிவராத்திரியின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதல் சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06107) வருகிற 15ம் தேதி காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை மதியம் 12 மணிக்க்கு தொடங்குகிறது.

மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06108) வருகிற 16ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் காலை 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை மதியம் 12 மணிக்க்கு தொடங்குகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் செல்லும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06109) வருகிற 15ம் தேதி மதியம் 12 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மாலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து தாம்பரம் செல்லும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06110) வருகிற 16ம் தேதி அதிகாலை 3 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.