சேலம்,
கோவை-லோக் மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் லோக்மான்ய திலக்- கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் பெங்களூரு யெலஹங்கா ரெயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை சோதனை அடிப்படையில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 8.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு சேலம் வழியாக மாலை 4.41 மணிக்கு பெங்களூரு யெலஹங்கா ரெயில் நிலையம் சென்றடையும்.
பின்னர் அங்கிருந்து 4.43 மணிக்கு புறப்பட்டு யெலஹங்கா சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் லோக் மான்ய திலக்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (11013) லோக் மானியத்தில் ரெயில் நிலையத்திலிருந்து இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு யெலஹங்கா ரெயில் நிலையம் மறுநாள் இரவு 7.28 மணிக்கு வந்தடையும். இங்கிருந்து 7.30 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக கோவை சென்றடையும். இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.