தமிழக செய்திகள்

தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் (16103/16104) தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில், தினந்தோறும் மாலை 6.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.45 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும். மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த நிலையில், இந்த ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, வருகிற 16ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் பண்ருட்டி ரெயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT