சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. இதைத் தொடர்ந்து, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் கவர்னரை சந்தித்து உரிமை கோரியிருந்தார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலை தரவேண்டும் என்று நடிகர் விஜய்யிடம் கவர்னர் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததால், விஜய்யால் திட்டமிட்டபடி நாளை பதவியேற்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, தமிழக கவர்னரை தவெக நிர்வாகியும் எம்.எல்.ஏவுமான ஆதவ் அர்ஜுனா மீண்டும் சென்று சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவு பட்டியலை வழங்கியதாவும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் தவெக சார்பில் கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.