தமிழக செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு பாலர் வகுப்பில் சேர்க்கை வழங்கப்படும்.

சென்னை,

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், பால்வாடிகா எனும் பாலர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஏப்ரல் 2-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு முடிந்ததும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு பாலர் வகுப்பில் சேர்க்கை வழங்கப்படும். குழந்தைகளின் சேர்க்கையை பொறுத்து 3 முறை பட்டியல் வெளியிடப்படும். மேலும், விபரங்களை https://rochennai.kvs.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.