சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம், திருவள்ளூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்பு மனுக்கள் பரீசிலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.