தமிழக செய்திகள்

சேலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திறந்த வாகனத்தில் நின்றவாறு எடப்பாடி தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சேலம்,

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் திறந்த வாகனத்தில் நின்றவாறு எடப்பாடி தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

SCROLL FOR NEXT