தமிழக செய்திகள்

இந்திய அரசியலில் அழியாத அத்தியாயம் படைத்தவர் அத்வானி - அன்புமணி ராமதாஸ் புகழாரம்!

இந்தியாவை ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவை உருவாக்கி வளர்த்தெடுத்ததில் அத்வானியின் பங்கு அளப்பரியது.

சென்னை,

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அத்வானி பிறந்த நாள்

இந்திய அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத அத்தியாயத்திற்கு சொந்தக்காரரான பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் உள்துறை மந்திரியுமான எல்.கே.அத்வானியின் பிறந்த நாள் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி, அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவை ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவை உருவாக்கி வளர்த்தெடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது. இந்தியாவில் அதிக காலம் தொடர்ந்து உள்துறை மந்திரியாக பணியாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யாவின் கோரிக்கையை ஏற்று 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த கொள்கை அளவில் ஒப்புக்கொண்டவர்.

வாழும் அரசியல் தலைவர்களில் மிக மூத்தவரான பாரத ரத்னா எல்.கே. அத்வானி இன்னும் நீண்ட காலம் வாழ்த்து வழிகாட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT