திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், சென்னாம்பேட்டை பகுதியில் விவசாயக் கிணற்றிலிருந்து பம்பு செட் மூலம் இறைக்கப்பட்ட தண்ணீர் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி வழிந்ததைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றின் கிளை ஆற்றில், ஜாப்ராபாத் ஊராட்சி கழிவுநீர் நேரடியாகக் கலக்கிறது. மணல் கொள்ளையர்களால் தோண்டப்பட்ட பள்ளங்கள் மற்றும் தடுப்பணையில் குட்டை போல் தேங்கும் கழிவுநீராலும் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னாம்பேட்டை பகுதியில் விவசாயக் கிணற்றிலிருந்து பம்பு செட் மூலம் இறைக்கப்பட்ட தண்ணீர் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி வழிந்தது. இதைக்கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு பாலாற்றின் கிளை ஆற்றில் கலக்கும் கழிவுநீரே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, தேங்கியுள்ள கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றி ஆற்றைச் சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.