தமிழக செய்திகள்

விடைபெற்றது அக்னி.. வெயிலின் தாக்கம் சில நாட்கள் நீடிக்கும் - வானிலை மையம்

கோடை வெயிலின் தாக்கம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த ஏப்ரல் மாதம் கோடை காலம் தொடங்கியது. கோடை காலத்தின் உச்சக்கட்டம் என்று வர்ணிக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியது.

அக்னி வெயில்

24 நாட்களாக போட்டு தாக்கிய அக்னி வெயில் இன்றுடன் (28-ம் தேதி) விடை பெற்றது.

ஆனாலும் கோடை வெயிலின் தாக்கம் விடாப்பிடியாக இருக்கிறது. இந்த வெயிலின் தாக்கம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

அடுத்த மாதம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் சற்று வெப்பம் குறையலாம். அதன் பிறகு படிப்படியாக கோடை வெயிலின் தாக்கம் குறையும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.