சென்னை,
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) நாளை, மே 4, 2026 அன்று தொடங்கி மே 28, 2026 வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மார்ச் மாதத்தில் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது. இந்நிலையில், பகல் நேர வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெப்பம் பதிவாகிவரும் நிலையில், நாளை முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.