சென்னை,
பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக ஆமதாபாத்தில் இருந்து வருகிற 6-ந்தேதி, 13-ந்தேதி காலை 9.30 மணிக்கு புறப்படும் அகமதாபாத்-திருச்சி வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:09419) ரேணிகுண்டா, திருத்தணி, மேலபாக்கம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு வழியாக திருச்சிக்கு வரும். அந்த நாட்களில் அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம் செல்லாது.
அதேபோல் திருச்சியில் இருந்து வருகிற 9-ந்தேதி, 16-ந்தேதி காலை 5.45 மணிக்கு புறப்படும் திருச்சி-ஆமதாபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்:09420) செங்கல்பட்டு, காஞ்சீபுரம், மேல பாக்கம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக அகமதாபாத் செல்லும். அந்த நாட்களில் தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம் வழியாக செல்லாது.