சென்னை,
இடைத்தேர்தல் தோல்வி குறித்து 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் சி.வி.சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
இரண்டு இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இது ஒரு மோசமான தோல்வி. இந்த தோல்வி மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிமுக தொண்டர்களுக்கு தேவை நம்பிக்கை. அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் கலந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும். இதன் மூலம் கட்சியை மீட்டெடுக்கலாம்.
நான் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் துணை நின்று ஒத்துழைப்பு தருவோம். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக தலைமை கலந்தாலோசிக்க வேண்டும். அதிமுக தலைமை அனைவரையும் அரவணைக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்தால் மீண்டும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆட்சியை கொண்டுவர முடியும்.”
இவ்வாறு அவர் பேசினார்.