சென்னை,
த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்ட 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவது என சட்டப்பேரவைத் தலைவர் எடுத்த முடிவு சரியானதுதான் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோர்ட்டு தீர்ப்புக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு நன்றி. கோர்ட்டு தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். இதையடுத்து, சட்டமன்ற நேரலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அவைக்குறிப்பில் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டாலும், நேரலை மூலம் அவற்றை ரீல்ஸ் வீடியோவாக வெளியிடுகிறார்கள் என்று கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஜே.சி.டி.பிரபாகர், “இது குறித்து சட்டமன்றத்தில் ஏற்கனவே நான் கூறிவிட்டேன். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை எடுத்து, எந்த வகையில் அதை பயன்படுத்தினாலும் அது அவையின் மாண்பை குறைக்கும் செயல். இது குறித்து உரிமை மீறல் பிரச்சினைக்காக கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கடிதங்கள் என்னுடைய ஆய்வில் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.