தமிழக செய்திகள்

அரசு பேனரில் அதிமுக எம்.எல்.ஏ.வின் பெயர் புறக்கணிப்பு - அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர் ரமேஷ்

பழனி முருகன் கோவிலில் அன்னதான வரிசையில் நின்று பொதுமக்களுடன் அமர்ந்து அமைச்சர் ரமேஷ் உணவருந்தினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்ள இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் வருகை தந்தார். அப்போது அங்கு அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பழனி தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வான கே. ரவி மனோகரன் தனது பெயர் இல்லாததை கண்டு கடும் அதிருப்தி அடைந்தார்.

கடுமையாக எச்சரித்தார்

இதை பார்த்த சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் விழாவிற்கு வந்த அமைச்சர் ரமேஷிடம் இந்த சம்பவத்தை பற்றி தெரிவித்தனர். இதை தொடர்ந்த அமைச்சர் அங்கிருந்த அதிகாரியை அழைத்து அரசு பேனரில் சட்டமன்ற உறுப்பினரின் பெயரை ஏன் வைக்கவில்லை விளக்கம் கேட்டார் அதற்கு பின் அரசு நெறிமுறைகள் கவனமாக செயல்படுத்த வேண்டும் இனி இது போன்று தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.

தவறு நடக்காது

கோவில் விழாவிற்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினரை நேரில் அழைத்து அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பழனி தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன் பெயர் இடம்பெறவில்லை. இந்த தவறு எங்கு நடந்தது என்பது தெரியாது. இது போல் இனி தவறு நடக்காது. என்று அமைச்சர் ரமேஷ் கேட்டு கொண்டார்.

2 மணி நேரம்

பழனியில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பொது தரிசன வரிசையில் மக்களோடு மக்களாக காத்திருந்து 2 மணி நேரம் நின்று சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து அன்னதான வரிசையில் நின்று பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அமைச்சர் ரமேஷின் இந்த செயல் அங்கிருந்த பக்தர்களையும் பொதுமக்களையும் பூரிப்படைய செய்தது.