கோபிசெட்டிபாளையம்
ஈரோடு மாவட்டம் கோபியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:- குதிரை பேரம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் தங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்ல வேண்டும்.
41 எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்துக்கொண்டு முதல்-அமைச்சர் ஆகலாம் என்று கூறினார்களா? இல்லையா? இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் தெளிவாக விளக்கியபிறகும் அதற்கு இதுவரை அ.தி.மு.க.விடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நாங்கள் வெளியே வருகிறோம் என்று அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறினார்கள் வட துருவமும், தென் துருவமும் ஒருபோதும் இணைய போவதில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒன்றிணைய சாத்தியம் இல்லை என்பதை காட்டும் விதமாகவே அந்த கட்சியில் இருந்து பிறர் வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.