சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும்; கழக வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும், "கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள்; மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள்; கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டக் கழக இணைச் செயலாளர், மாவட்டக் கழக துணைச் செயலாளர்; தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் கழக செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டம்" சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 1.7.2026 - புதன் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் 'புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார்கள். இக்கூட்டத்தில் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். ஆகவே, மேற்கண்ட பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.