தமிழக செய்திகள்

31-ந் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தொடக்க நாள் பொதுக்கூட்டம்

இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

எடப்பாடி பழனிசாமி தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் அ.தி.மு.க. தொடக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 55-ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 17.10.2026 அன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக அப்பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சிறப்புப் பேருரை

இந்நிலையில், 31.10.2026 - சனிக் கிழமையன்று, செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மறைமலைநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார்கள்.

அறிவிப்பு

ஆகவே, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT