தமிழக செய்திகள்

ஐப்பசி அமாவாசை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.

ஐப்பசி அமாவாசை

இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 4 நாட்கள் மலை ஏறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென மழை பெய்து ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT