புதுடெல்லி,
சமீபத்திய மாதங்களில், சவூதி அரேபியாவின் பல்வேறு நகரங்களும் அவற்றின் உள்கட்டமைப்புகளும் ஹவுதிக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. எனவே, அங்கு நிலவும் பதற்றமான சூழல் காரணமாக அந்நாட்டுக்கு செல்லும் விமான சேவைகளை இந்திய விமானங்கள் ரத்துசெய்து வருகின்றன. அவ்வப்போது ரத்து அறிவிப்பை நீட்டிப்பு செய்து வருகின்றன.
அந்த வகையில், ஜெட்டாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 24 நவம்பர் 2026 வரையும், ரியாத் மற்றும் தம்மாமிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானச் சேவைகள் 30-ந்தேதி வரையும் ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் சவூதி அரேபிய நகரங்களை இணைக்கும் விமானச் சேவைகளை ரத்து செய்ததை 30-ந்தேதி வரை நீட்டிப்பதாக நேற்று முன் தினம் அறிவித்தது. அதேபோல, அகாசா ஏர் நிறுவனம், ரியாத் மற்றும் ஜித்தாவுக்கான தனது விமானச் சேவைகளை நவம்பர் 30 வரை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.