புதுடெல்லி,
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் தங்கள் துறை சார்ந்த 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என டெல்லி அரசின் 2 மந்திரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, நேற்று முன்தினம் காற்றின்தரக்குறி யீடு 403 ஆக உயர்ந்து 'மிகவும் மோசம்' என்ற பிரிவை எட்டியது.
இதையடுத்து, வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், அம்மாநிலசுற்றுச் சூழல்துறை அமைச்சர் மஞ் சிந்தர் சிங் சிர்சா மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் ஆகி யோர், தங்கள் துறையில் பணியாற்றும் 50சதவீதஊழி யர்கள் வீட்டிலிருந்தே பணி புரிய வேண்டும் என உத்தர விட்டுள்ளனர். எனினும், இந்த உத்தரவு மருத்துவம னைப் பணியாளர்களுக்கு பொருந்தாது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது, "தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகா ரிகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். சுகா தாரத்துறைக்கு இது பொருந் தாது. மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும் அத்தியாவசியப்பணியாளர் களாகக் கருதப்படுகின்ற னர்” என்றார்.
அதேபோல், அவசரகால மீட்புப்பணிகள், தீயணைப் புத்துறை, மின்சாரம், குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையே, காற்றுத் தர மேலாண்மை ஆணை யம் பிறப்பித்த உத்தரவில், "டெல்லி மற்றும் அதை ஒட் டியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தின்5 மாவட்டங்களில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், நவம்பர் 5ம் தேதி முதல் 20ம் தேதி வரை அதிகபட்சமாக 50 சத வீத ஊழியர்களுடன் மட்டுமே அலுவலகத்தில் செயல்பட வேண்டும். மீத முள்ளஊழியர்கள் வீட்டிலி ருந்தே பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நேற்று காலையிலும் டெல்லியின் காற்றின் தரம் 'மிகவும் மோசம்”என்ற பிரிவிலேயே நீடித்தது.