தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்

காற்றின் தரம் ராயபுரத்தில் 238, மணலியில் 182, கொடுங்கையூரில் 177 ஆக பதிவாகி உள்ளது.

சென்னை

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மக்கள் காலையிலேயே எழுந்து, குளித்து, புது ஆடைகளை அணிந்து, பலகாரம் உண்டும், பகிர்ந்தும், சிறப்பாக கொண்டாடினர். இதேபோன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

காற்றின் தரம் பாதிப்பு

இந்நிலையில், சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்து உள்ளது. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்படைந்தது. இதில், ராயபுரம் (238) முதலிடத்தில் உள்ளது.

இதன்படி, காற்றின் தரம் ராயபுரத்தில் 238, மணலியில் 182, கொடுங்கையூரில் 177 ஆக பதிவாகி உள்ளது. பெருங்குடியில் காற்று தரக்குறியீடு 173 ஆகவும், அரும்பாக்கத்தில் 165, வேளச்சேரியில் 74 ஆக பதிவாகி உள்ளது.

இரட்டிப்பு

சென்னையின் சராசரி காற்று தரக்குறியீடு 159 ஆக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 6-ல் 56 ஆகவும், நவம்பர் 7-ல் 74 ஆகவும் பதிவாகி இருந்தது.

ஆனால், நடப்பு ஆண்டில் இது இரட்டிப்படைந்துள்ளது. அதிகரித்த காற்று மாசால் சென்னைவாசிகள் பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழல் காணப்படுகிறது.

SCROLL FOR NEXT