தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு நுழைவு வாயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டன

24 மணி நேரத்துக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகம் யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம் பூட்டப்பட்டு இருக்கும். இதன் மூலம் இந்த சொத்து ஐகோர்ட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்ற உரிமை நிலை நாட்டப்படுகிறது.

சென்னை,

சொத்தின் மீதான உரிமையை நிலைநாட்டும் விதமாக சென்னை ஐகோர்ட்டு வளாகம் யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டன.

சென்னை ஐகோர்ட்டு நுழைவு வாயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டன

சென்னை ஐகோர்ட்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த ஐகோர்ட்டு வளாகத்தை நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள் என்று அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கட்டிடம், நிலம் உள்ளிட்டவை ஐகோர்ட்டுக்கு மட்டுமே சொந்தமானது. இந்த சொத்தின் மீது யாரும் உரிமை கோரக்கூடாது என்பதற்காக, ஆண்டுக்கு ஒருமுறை சென்னை ஐகோர்ட்டில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களும் 24 மணி நேரத்துக்கு இழுத்து மூடப்படும்.

யாருக்கும் அனுமதி கிடையாது

ஐகோர்ட்டு வளாகத்துக்குள் 24 மணி நேரத்துக்கு காவலாளி உள்ளிட்ட யாருக்கும் அனுமதி கிடையாது. அதாவது, இந்த சொத்தின் மீது ஐகோர்ட்டு நிர்வாகத்துக்கு உள்ள ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த நடைமுறை பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரவு 8 மணி வரை பூட்டப்பட்டு இருக்கும்

அந்த வகையில் ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த நடைமுறை நேற்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்று இரவு 8 மணிக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களும் இழுத்து மூடி பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது. உள்ளே இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி வரை வளாகத்துக்குள் யாருக்கும் அனுமதி கிடையாது. அதாவது 24 மணி நேரத்துக்கு ஐகோர்ட்டு வளாகம் யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம் பூட்டப்பட்டு இருக்கும். இதன் மூலம் இந்த சொத்து ஐகோர்ட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்ற உரிமை நிலை நாட்டப்படுகிறது.

SCROLL FOR NEXT