தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் 72 மாணவர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த புகார் : உதவி தலைமை ஆசிரியர் பணி இடை நீக்கம்

72 மாணவர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் உதவி தலைமை ஆசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

விழுப்புரம் ,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 72 மாணவர்களை துணை தலைமை ஆசிரியர் தாக்கியதாக புகார் எழுந்துள்ள நிலையில், தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தால் செஞ்சி அரசு பள்ளியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.அசம்பாவிதங்ங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்ட்டுள்ளனர்.

இந்த நிலையில் 72 மாணவர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் உதவி தலைமை ஆசிரியர் நந்தகோபால கிருஷ்ணனை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..மாவட்ட ஆட்சியர் உத்தரவை தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு உள்ளார்

SCROLL FOR NEXT