தமிழக செய்திகள்

தனியார் கம்பெனியில் அலுமினிய வயர் திருட்டு: 4 பேர் கைது

மானூர் பகுதியிலுள்ள தனியார் கம்பெனியின் மேனேஜர் தான் பணிபுரியும் கம்பெனிக்கு சென்று பார்த்தபோது, சுமார் 500 மீட்டர் அளவுள்ள அலுமினிய வயரை காணவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சத்யராஜ் (வயது 45) என்பவர் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தனியார் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 27.2.2026 அன்று காலை தான் பணிபுரியும் கம்பெனிக்கு வந்து பார்த்தபோது, சுமார் 500 மீட்டர் அளவுள்ள அலுமினிய வயரை காணவில்லை.

இதுகுறித்து சத்யராஜ் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அதில் நடுபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த ராமர் (வயது 26), விக்னேஷ்(26) அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த சிவகணேஷ்(25), ராபின்ராஜா(23) ஆகிய 4 பேரும் சேர்ந்து அலுமினிய வயரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், அவர்கள் 4 பேரையும் நேற்று கைது செய்தார்.