தமிழக செய்திகள்

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.