சென்னை
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழக அரசின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்.நினோ பாதிப்பினால் மழைப்பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 முதல் 07.09.2026 வரை நாளொன்றுக்கு, வினாடிக்கு 1,000 கன அடி வீதம் 8 நாட்களுக்கும் போதிய மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.