தமிழக செய்திகள்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொதுவேட்பாளரால் த.வெ.க.விற்கு எந்த நெருக்கடியும் இல்லை - அமைச்சர் விஜய் பாலாஜி

தமிழக முதல்-அமைச்சர் விஜய் மீது மக்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்தினால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நெருக்கடி ஏற்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

நெருக்கடி வராது

“அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொதுவேட்பாளரால் த.வெ.க.விற்கு நெருக்கடி எதுவும் வராது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தமிழக முதல்-அமைச்சர், த.வெ.க. தலைவர் விஜய் மீது மக்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

நிச்சயம் வெற்றி பெறுவோம்

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல், திருமங்கலம் பார்முலாவை உடைக்கும் வகையில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது. நிச்சயம் வருங்காலங்களில் எந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் த.வெ.க. தொடர்ந்து வெற்றி பெறும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT