தமிழக செய்திகள்

ஆம்பூர்: கோழி இறைச்சி சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

பெண்குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதகடுப்பு பகுதியைச் சேர்ந்த சுதீஷ் - ஸ்ரேயா தம்பதிக்கு 2 பெண்குழந்தைகள் உள்ள நிலையில், நாய்க்கு வைக்கப்பட்ட கோழி இறைச்சியை இரு குழந்தைகளும் சாப்பிட்டதால் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரு குழந்தைகளையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் 3 வயதான மூத்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து ஆம்பூர் காவல் நிலைய போலீசார் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் மே 10-ஆம் தேதி சமைத்த கோழி இறைச்சி குழம்பை மே 12-ஆம் தேதி நாய்க்கு வைத்துள்ளனர். இதனை தெரியாமல் சாப்பிட்ட பெண்குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.