கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

புதுச்சேரி திமுக சட்டமன்ற தலைவராக ஏ.எம்.எச்.நாஜிம் நியமனம்

புதுச்சேரி திமுக சட்டமன்ற தலைவராக ஏ.எம்.எச்.நாஜிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

புதுச்சேரி மாநில திமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகளை நியமித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி. தலைமையில், புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளர் ரா.சிவா அவர்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்த புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி, புதுச்சேரி மாநில திமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் பின்வருமாறு நியமிப்பதென முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஏ.எம்.எச்.நாஜிம், எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில திமுக சட்டமன்ற கட்சித் தலைவராகவும்; துணைத் தலைவராக ஆர்.ஆர்.செந்தில்குமார், எம்.எல்.ஏவும்; கொறடாவாக ஏ.கே.ரமேஷ் (எ) செந்தில், எம்.எல்.ஏவும்; செயலாளராக வி.கார்த்திகேயன், எம்.எல்.ஏவும்; பொருளாளராக விக்னேஷ் கண்ணன், எம்.எல்.ஏவும் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.