தமிழக செய்திகள்

11 தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பட்டியல் - டி.டி.வி.தினகரன் வெளியிட்டார்

அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை,

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில், அ.ம.மு.க.வுக்கு நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், சைதாப்பேட்டை, மடத்துக்குளம், பூந்தமல்லி, திருச்சி மேற்கு, பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னையில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

நாங்குநேரி - இசக்கிமுத்து

ஒட்டப்பிடாரம்- சுந்தர் ராஜன்

சைதாப்பேட்டை- செந்தமிழன்

மடத்துக்குளம் - சண்முகவேலு

பூந்தமல்லி - ஏழுமலை

திருச்சி மேற்கு- தொட்டியம் ராஜசேகரன்

பெரியகுளம் - கதிர்காமு

மன்னார்குடி - எஸ்.காமராஜ்

திருவையாறு - வேலு கார்த்திகேயன்

காரைக்குடி - தேர்போகி பாண்டி

திருப்பத்தூர் - ஞானசேகரன்

வேட்பாளர்கள் அறிவிப்பை தொடர்ந்து, அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையையும் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டார்.