தமிழக செய்திகள்

நிலச்சரிவு காரணமாக அம்ரித் பாரத் ரெயில் சேவையில் மாற்றம்

திருவனந்தபுரம் சென்ட்ரல் - நாகர்கோவில் டவுன் இடையிலான ரெயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை - பாறசாலை ரெயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இதன்படி, கடந்த 21-ந் தேதி மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் நோக்கிப் புறப்பட்ட 16121 எண் கொண்ட தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

ரெயில் சேவையில் மாற்றம்

அதேபோல், இன்று (22-ந் தேதி) காலை 10.40 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து தாம்பரம் புறப்பட வேண்டிய 16122 எண் கொண்ட திருவனந்தபுரம் சென்ட்ரல் - தாம்பரம் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.47 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், திருவனந்தபுரம் சென்ட்ரல் - நாகர்கோவில் டவுன் இடையிலான ரெயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT