தமிழக செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 6 பவுன் நகை பறிப்பு

அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயமு 72), விவசாயி. இவரின் மனைவி விஜயகுமாரி (66). கஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜயகுமாரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

சம்பவத்தன்று மாலை வீட்டுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்ததாகவும், அவர் விஜயகுமாரியை தாக்கிவிட்டு, அவரின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT